வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான குண்டூஸில் தலிபான் இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கானிய வீரர்களும் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மாகாணத்தின் அலியாபாத் மாவட்டத்தில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியிலேயே இந்த தாக்குதல் சனிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்திச் சேவை இதனை தெரிவித்துள்ளது.
2020 செப்டெம்பர் மாதம் கட்டார் தலைநகர் தோஹாவில் ஆப்கான் அரசாங்கத்திற்கும் தலிபான் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய போதிலும் ஆப்கானிய ஆயுதப் படைகளும் தலிபான்களும் நாடு முழுவதும் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment