அமெரிக்காவின் டெக்சாஸை பேரிடர் மாகாணமாக அறிவித்தார் ஜனாதிபதி ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

அமெரிக்காவின் டெக்சாஸை பேரிடர் மாகாணமாக அறிவித்தார் ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது. அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி போனதால் மக்கள் குளிரில் உறைந்து போயுள்ளனர். 

சாலைகள், வீடுகளின் மீது பனிக் கட்டிகளாக காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் இணைப்பு இல்லாமல் மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவுக்கு அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் அந்த மாகாணத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் டெக்சாஸ் மாகாணத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad