ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையினால் அவ் உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இது விடயமாக வெளியிடப்பட்டுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அதி விசேஷ வர்த்தமானப் பத்திரிகையில் தெரிவிக்கட்டுள்ளதாவது
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் ஆகிய என்னால் 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) ஆம் பிரிவின் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம்
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையினால் அவ் உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் பின்வருமாறு நடாத் துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச சபை பெப்ரவரி 10 ஆம் திகதி முற்பகல் 9 மணி, சேருவில பிரதேச சபை பெப்ரவரி 10 மு.ப. 11.30 மணி, கோறளைப்பற்று வடக்கு பெப்ரவரி 11 மு.ப. 9.00 மணி, ஏறாவூர் நகர சபை பெப்ரவரி 11 பகல் 12.00 மணி, மண்முனை பிரதேச சபை பெப்ரவரி.11 பி. ப. 2.30 மணி பொத்துவில் பிரதேச சபை பெப்ரவரி 12 மு.ப. 10.00 மணி, இறக்காமம் பிரதேச சபை பெப்ரவரி 12 பி. ப. 2.30 மணி
No comments:
Post a Comment