கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி : ஒருவர் கைது, மூவரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி : ஒருவர் கைது, மூவரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு

(செ.தேன்மொழி)

மீகஹாதென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீகஹாதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹட்டகல்ல - போதலாவ பகுதியில் நேற்று, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது படுகாயமடைந்திருந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மீகஹாதென்ன - போதலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும், பிரிதொரு நபர்களுக்குமிடையில் நீண்ட நாட்களாக காணப்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களுள் ஒருவரை கைது செய்துள்ளனர். ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad