முரளியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைப்பு, ஆகஸ்டில் மீண்டும் எல்.பி.எல் - பாராளுமன்றில் அமைச்சர் நாமல் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

முரளியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைப்பு, ஆகஸ்டில் மீண்டும் எல்.பி.எல் - பாராளுமன்றில் அமைச்சர் நாமல் தெரிவிப்பு

பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்றுவிப்பதும் மேற்பார்வை செய்வதும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்குமான மிக முக்கிய பொறுப்பு முத்தையா முரளிதரனிடம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்த்தில் தெரிவித்தார்.

பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அடிப்படை வசதிகளை விடவும் பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமையே பாரிய பிரச்சினையாக உள்ளது. எனவே பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும். இதில் முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம்.

அதேபோல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதற்கான நிர்வாகக் குழுவொன்று இம்மாதம் இறுதிக்குள் நியமிக்கப்படும், சகல உரிமைத்துவ லீக் போட்டிகள் தொடர்பில் முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் மேற்பார்வை குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கரப்பந்தாட்டம், கபடி, கூடைப்பந்து போன்ற போட்டிகளையும் எல்.பி.எல் போட்டிகளை போன்று நடத்தவும் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad