இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவுக்கு ஐவரின் பெயர்கள் பிரேரிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 4, 2021

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவுக்கு ஐவரின் பெயர்கள் பிரேரிப்பு

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவுக்கு ஐந்து முன்னாள் வீரர்களின் பெயர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரேரித்துள்ளது.

இந்த பெயர்களை தேசிய விளையாட்டுத்துறை தெரிவுக் குழுவுக்கும் தேசிய விளையாட்டுத்துறை பேரவைக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுப்பி வைத்துள்ளது

அர்ஜுன ரணதுங்க தலைமையில் 1996 இல் உலக சம்பியனான இலங்கை அணியில் இடம்பெற்ற ப்ரமோதய விக்ரமசிங்க (தலைவர்) மற்றும் ரோமேஷ் களுவித்தான, இலங்கையின் முன்னாள் வீரர்களான கப்பில விஜேகுணவர்தன, ஹேமன்த விக்ரமரட்ன, முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வருண வராகொட ஆகியோர் தெரிவுக் குழு உறுப்பினர்களாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ளனர். 

தேசிய விளையாட்டுத்துறை தெரிவுக் குழுவும் தேசிய விளையாட்டுத்துறை பேரவையும் இதனைப் பரீட்சித்த பின்னர் மூவரின் பெயர்களை விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கும். 

தேசிய விளையாட்டுத்துறை தெரிவுக் குழுவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமை தாங்குகின்றார்.

இக்குழுவில் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயாலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, ஹாபீஸ் மார்சோ (ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மாஅதிபர்), அர்ஜுன் பெர்னாண்டோ ஆகியோரும் இடம்பெறுகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad