சுங்கத்துறையை ஒழுங்குபடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் கோத்தாபய - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

சுங்கத்துறையை ஒழுங்குபடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் கோத்தாபய

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

சுங்கத் துறைக்கு எதிராக எழும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் முறைகேடுகளைத் தடுத்து வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கவனத்தில் கொண்டு, சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்குவது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு பொறுப்பாகும்.

பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் சுங்க தொழிற்சங்கங்கள் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் என்டனி குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.எம்.எம் சிறிவர்தன, சிரேஷ்ட ஆலோசகர் (வர்த்தகம்) கலாநிதி சனத் ஜயனெத்தி மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு. பி.ஏ டயஸ் ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

No comments:

Post a Comment