போலிச் சான்றிதழை வைத்துக் கொண்டு தன்னை மருத்துவராக இனங்காட்டி மருந்து விற்பனை நிலையம் ஒன்றையும் நடத்திச் சென்ற பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கண்டி அரசாங்க வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய கண்டி பொலிசாரினால் 47 வயதுடைய மேற்படி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பெண் டாக்டர் தமது முறைப்பாட்டில், தமது பெயரில் மருத்துவ பதிவுச் சான்றிதழை தயாரித்துள்ள குறித்த பெண்மணி தாம் ஒரு மருத்துவர் என இனங்காட்டிக் கொண்டு மருந்தகம் ஒன்றையும் நடத்திச் செல்வதாக குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment