பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவுகளின் குழந்தைகள், உறவினர்கள் படும் வேதனை சுமந்த வாழ்வுக்கு விடிவேண்டும் என பல நாட்களாக நடாத்திவரும் போராட்டம் இன்று சகல பேதங்களுக்கும் அப்பால் மக்கள் ஜனநாயக எழுச்சிப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

நாட்டில் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் நீண்டு செல்கின்றது. இதற்கு தீர்வு வேண்டி இன்று மக்கள் எழுச்சிப்போராட்டமாக உருவெடுத்துள்ளது. இத்தகைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு ஆதரவை வழங்கி நிற்கின்றது.

பிரிக்கப்படாத தொப்புழ் உறவோடு வாழும் எம் இனத்தின் துயரவாழ்விற்கு நீதி கிடைத்து எதிர்கால சந்ததியாவது நிம்மதியாக வாழ்வதற்கு வழியேற்படவேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த ஆசிரியச் சமூகமும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment