அமசோன் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

அமசோன் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ்

அமசோன் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெப் பெசோ அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2017 ஒக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகி, நிர்வாக தலைவராகவும், அறக்கட்டளை பணிகளிலும் ஈடுபட உள்ளதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

அவரது இடத்திற்கு அமசோன் இணையத் தள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆன்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பேருக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, ஜெப் பெசோசின் அறக்கட்டளை பணிகள் வெல்லட்டும் என வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

ஆன்டி ஜாஜஸ்ஸிக்கு மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெல்லாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment