(எம்.மனோசித்ரா)
கொழும்பு - லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது அலையில் மாத்திரம் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் அவர்களின் தாய்மார் அல்லது பாதுகாவலர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக் குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.
இதுவரையில் லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் தொடர்பிலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமை தொடர்பிலும் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் அலையின் பின்னர் லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அவர்களின் தாய்மார் அல்லது பாதுகாவலர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 158 சிறுவர்களுக்கும், 128 தாய்மார் அல்லது பாதுகாவலர்களுக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் நன்மை 80 சதவீதமான போதிலும், பொதுமக்களுக்கும் இவற்றை வழங்கும் போது பெருமளவானோர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய பாதிப்பிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியும்.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment