கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம் : தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம் : தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி திட்டமிட்டபடி இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.

பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் தடைகள் மறிப்புகள் இருந்தன. அத்தனை தடைகளையும் தாண்டி இப்பேரணி நடைபெற்று வருகிறது.

பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கனமழை பெய்த பொழுதிலும் அனைவரும் நனைந்த வண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. சிறிநேசன், சி.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் சமயத் தவைர்கள் சிவில் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment