இன்று (03) முற்பகல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், இலங்கை முதலீட்டு சபை, கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்குச் சொந்தமான சுமார் 10 தீயணைப்பு பவுசர்கள் பயன்படுத்தப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் குப்பைகளை சேமித்து வைக்கும் கிடங்கிலேயே முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் குறித்த தீ விபத்து காரணமாக, எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தீ பரவுவதற்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment