எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத் திறனாளிகளுக்கான இளநிலா தையல் நிலையம் கறுவாக்கேணியில் திறந்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் டி.மலேஸ்வரன், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கறுவாக்கேணி கிராம சேவை அதிகாரி அ.பிரபு, கறுவாக்கேணி மாதர் சங்கதலைவி, முன்பள்ளி ஆசிரியர், சமூக நிலைய உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்களும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அதனோடு இணைந்த பொருட்களும் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது
வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் மாற்றுத்திறனாளி ஒருவரின் மருத்துவ செலவுக்காக மூப்பதாயிரம் ரூபாவும், சுயதொழில் உதவிக்காக ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சியினை மேற்கொண்ட பெண்களுக்கு தையல் இந் நிலயத்தின் மூலம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருமானத்தினை அதிகரித்து சொந்தகாலில் நிற்க கூடிய வகையில் வேலைத்திட்டம் இடம் பெற்றதாக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment