சட்டக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார் சட்டத்தரணிகள் சங்க தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

சட்டக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார் சட்டத்தரணிகள் சங்க தலைவர்

சட்டக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பிரீஸ் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக் கொள்ளக்கூடாதென சட்டத்தரணி சாலிய பீரிஸ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் சட்டக் கல்லூரி மாணவன் மிக மோசமாக தாக்கப்பட்டமை தொடர்பில் டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவு செய்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பேலியகொடையில் சட்டக் கல்லூரி மாணவன் மிகார குணரட்ண பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தாக்குதலிற்கு உள்ளானமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது என சாலிய பீரிஸ் இதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment