இலஞ்சம் பெற்ற கிராம அலுவலர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

இலஞ்சம் பெற்ற கிராம அலுவலர் கைது

களுத்துறை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட கிராம அலுவலர் ஒருவர் ரூபா 8,000 பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவையில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரை, இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

இக்கைது நடவடிக்கை இன்று (10) இடம்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டாளரினால் கொள்வனவு செய்யப்பட்டு, வெட்டப்பட்ட 3 பலா மரங்கள் மற்றும் ஒரு தேக்கு மரம் ஆகியனவற்றிற்கு போக்கு வரத்து அனுமதி பெற்றுத் தருதல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரான கிராம அலுவலர், களுத்துறை, நீலகேத விகாரைக்கு அருகில் வைத்து, ரூ. 8,000 இனை இலஞ்சமாக பெறறுக் கொண்ட வேளையில், கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனது.

No comments:

Post a Comment

Post Bottom Ad