பாடசாலைக்குள் ஆயுதங்கள்? தேடுதல் நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

பாடசாலைக்குள் ஆயுதங்கள்? தேடுதல் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன், வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தினுள் கனரக வாகன உதவியுடன், இன்று (10) தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியின் தலைமையில், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தத் தேடுதலை மேற்கொண்டனர்.

எனினும், இந்தத் தேடுதலின்போது எவ்விதமான ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

(வெல்லாவெளி நிருபர் - க. விஜயரெத்தினம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad