பங்காளிகள் கோரிக்கை வைத்தாலும் இறுதித் தீர்மானங்கள் கட்சியின் உயர் மட்டத்திலேயே எடுக்கப்படும் என்கிறார் கெஹெலிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

பங்காளிகள் கோரிக்கை வைத்தாலும் இறுதித் தீர்மானங்கள் கட்சியின் உயர் மட்டத்திலேயே எடுக்கப்படும் என்கிறார் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஒரு பரந்த கூட்டணியாகும். எனவே இதன் பங்காளி கட்சிகளுக்கு கோரிக்கைகளை முன்வைப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இறுதித் தீர்மானங்கள் கட்சியின் உயர் மட்டத்திலேயே எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. 

இதன் போது, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்துக்களுக்கு அதன் பொதுச் செயலாளர் பதிலளித்துள்ளார்.

இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது கட்சிக்குள் சிக்கல் காணப்படுவதைப் போன்று தோன்றுகிறதே? ' என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஒரு பரந்த கூட்டணியாகும். எனவே இங்கு வெவ்வேறு கருத்துக்களை முன்வைப்பதற்கான உரிமை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மாத்திரமல்ல. சகலருக்கும் காணப்படுகிறது. எனினும் அவை தொடர்பான இறுதி தீர்மானம் கட்சியின் உயர்மட்டத்தில் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad