சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சை விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்வு வழங்கப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சை விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்வு வழங்கப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான பிரச்சினை 2013 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன்போது 2024 முதல் சட்டக் கல்லூரி தேர்வினை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த தீர்மானத்தால் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று கூறினால் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவூடாக தீர்த்துக் கொள்ள முடியும். 

தமிழ் மற்றும் சிங்களம் என்பவை தேசிய மொழிகளாக காணப்படும் அதேவேளை ஆங்கிலம் தொடர்புபடுத்தல் மொழியாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினை பல வருடங்களுக்கு முன்னரிலிருந்தே காணப்படுகிறது.

எனவே இது மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றால் பேசித் தீர்க்கப்பட வேண்டியவையாகும். சட்ட கல்வி தொடர்பான புத்தகங்கள் ஆங்கில மொழியில் காணப்படுவதால் சிலர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். 

எனினும் தற்போதுள்ள மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய இதற்கான தீர்வு எடுக்கப்படும். இதில் பக்க சார்பாகவோ சர்வாதிகாரமாகவோ தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad