காரை கொள்வனவு செய்வதாகக் கூறி கொள்ளையிட்டு சென்ற நபர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

காரை கொள்வனவு செய்வதாகக் கூறி கொள்ளையிட்டு சென்ற நபர்கள்

(செ.தேன்மொழி)

மத்தேகொட பகுதியில் 52 இலட்சம் ரூபாய் காரொன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி அதனை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மத்தேகொட பகுதியில் 52 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை விற்பனை செய்வதாகவும், அந்த காரை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளுமாறும் நபரொருவர் இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

குறித்த நபர் காரின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று குறித்த காரை கொள்வனவு செய்வதற்கு விளம்பரம் செய்த நபருக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. 

அதனைத் தொடர்ந்து காரை பார்வையிடுவதற்காக நால்வர் வந்துள்ளனர். வந்தவர்களில் மூவர் காரை செலுத்தி பார்க்க வேண்டும் என்று கூறி, கார் உரிமையாளருடன் அதனை ஓட்டிச் சென்றுள்ளனர். 

வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றதும் சந்தேக நபர்கள் உரிமையாளரை வெளியே தள்ளி காரை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

சந்தேக நபர்கள் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment