சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற அவுஸ்திரேலியா ஒப்புக் கொண்டதால், செய்திப் பக்கங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகத் தளங்களில் செய்திகள் இடம்பெற செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பில் இரு தரப்புகளும் இணக்கம் கண்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்தது.
புதிய மாற்றங்களால், பொது அக்கறைக்குரிய செய்தித்துறையில் முதலீடு அதிகரிக்கலாம், வரும் நாட்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பேஸ்புக்கில் செய்திப் பக்கங்கள் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலியாவில் செய்திப் பக்கங்கள் உட்பட மற்ற சில பக்கங்களையும் தடை செய்தது.
செய்திகளுக்காகக் கட்டணம் செலுத்துவது குறித்து உள்ளூர் ஊடகங்களுடன் ஏதேனும் ஒரு வழியில் இணக்கம் கண்டால் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.
முதலில் சேவைகளை மீட்டுக்கொள்வதாகக் கூறிய கூகுள் நிறுவனம், தன் நிலைப்பாட்டை மாற்றி நியுஸ் கோர்ப், நைன் என்டர்டெய்ன்மன்ட் போன்ற ஊடகத் தளங்களுடன் மில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
No comments:
Post a Comment