இளம் தாயும் சிசுவும் மரணம் : ஓட்டமாவடி பாலைநகரில் சோகம்! - News View

Breaking

Post Top Ad

Thursday, February 4, 2021

இளம் தாயும் சிசுவும் மரணம் : ஓட்டமாவடி பாலைநகரில் சோகம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், சேயும் மரணமடைந்த சம்பவம் ஓட்டமாவடி - பாலைநகர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகரைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் தாயொருவர் பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பெண்ணை பரிசோதனை செய்த வைத்தியர்கள், பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழந்து காணப்பட்டதை அடுத்து, சத்திர சிகிச்சை மூலம் நேற்று முன்தினம் உயிரிழந்த சிசுவை வெளியே எடுத்துள்ளனர்.

அத்துடன், தாய் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

பெண்ணின் ஜனாஸாவை வைத்தியசாலை நிர்வாகத்திடமிருந்து பொறுப்பேற்ற குடும்பத்தினர், பாலைநகர் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad