யாழ். பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

யாழ். பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment