இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பலை ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டினார் பிரதமர் நெதன்யாகு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பலை ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டினார் பிரதமர் நெதன்யாகு

கடந்த வாரம் ஓமான் வளைகுடாவில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பலை ஈரான் தாக்கியதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கூற்றுக்கு எவ்விதமான ஆதாரத்தையும் மேற்கொள் காட்டாமல் நெத்தன்யாகு, இஸ்ரேலிய பொது ஒளிபரப்பாளப்பு சேவையிடம் திங்களன்று "இது உண்மையில் ஈரானின் செயல், அது தெளிவாக உள்ளது" என்று கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு சொந்தமான பஹாமியன் கொடியிடப்பட்ட ஹீலியோஸ் ரே என்ற சரக்குக் கப்பல், மத்திய கிழக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்தபோது ஒரு மர்ம வெடிப்புக்குள்ளானது.

எனினும் இதனால் கப்பல் குழுவினர் எவரும் காயமடையவில்லை, ஆனால் கப்பல் அதன் துறைமுகப் பக்கத்தில் இரண்டு துளைகளும், அதன் ஸ்டார்போர்டு பக்கத்தில் இரண்டு துளைகளும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானுடனான பதட்டங்கள் மத்தியில் மத்திய கிழக்கு நீர் வழிகளில் பாதுகாப்பு கவலைகளை புதுப்பித்த இந்த தாக்குதல் சம்பவத்தின் சில நாட்களுக்குப் பிறகு, கப்பல் பழுதுபார்க்க துபாய் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வெடிப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் தற்சமயம் முன்வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய குற்றச்சாட்டுகளுக்கு ஈரானில் இருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment