மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மன்னார் ஆயர் இல்ல காணிகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மன்னார் ஆயர் இல்ல காணிகள்

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூமலந்தான் கிராமத்தில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணியில் வாழ்ந்து வந்த 11 குடும்பங்களுக்கு அக்காணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

நேற்று முன்தினம் இந்நிகழ்வு நடைபெற்றது. காணிகளுக்கான உறுதிப்பத்திரம் காணிகளில் வாழ்ந்து வந்தவர்களின் பெயரிற்கு மாற்றப்பட்டு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூமலந்தான் கிராமத்தில் மக்கள் மீள் குடியேறி வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணிகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 11 குடும்பங்களுக்கு காணியில் வாழ்ந்து வருபவர்களுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கும் வகையில் அவர்களின் பெயரில் வழங்க மன்னார் ஆயர் இல்லம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் உதவியுடன் குறித்த காணிகளுக்கான உறுதி எழுதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad