நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் பாராளுமன்ற சபை அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் அவை நடவடிக்கை ஆரம்பமானதைத் தொடர்ந்து, ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்தார்.

இதன்போது, அவையில் நிதி, மூலதனச்‌ சந்தை மற்றும்‌ அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி சபைக்கு வருகை தந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மு.ப. 10.15 இற்கு அவைக்கு வந்த ஜனாதிபதி, சுமார் 35 நிமிடங்களின் பின்னர் மு.ப. 10.50 மணியளவில் அவையிலிருந்து வெளியேறினார். 

இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்கு மு.ப. 10.05 மணியளவில் வந்த அவர் சுமார் 2 மணி நேரம் அங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த வேளை, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad