மனைவியின் வளர்ப்புத் தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் : பிரதமரின் மகனான ரோஹித ராஜபக்ஷ வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

மனைவியின் வளர்ப்புத் தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் : பிரதமரின் மகனான ரோஹித ராஜபக்ஷ வேண்டுகோள்

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட எனது மனைவியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோகித்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ரோகித ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டுக்குள்ளாகியுள்ள எனது மனைவியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்பின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நபர் தண்டனைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன்.

நானும் எனது மனைவியும் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றோம்.

குறித்த நபர் ஹோட்டலில் பெண்களை இரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனது மனைவியின் வளர்ப்புத் தந்தையுடன் தங்களிற்கு பல வருடங்களாக எந்த தொடர்புமில்லை. அதேவேளை, எனது மனைவியோ நானோ பல வருடங்களாக அவருடன் தொடர்பிலிருக்கவில்லை.

அவரது நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்பு. குறித்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகமும் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேணடும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad