ஜப்பானில் தனிமை பிரச்சினையை எதிர்கொள்ள தனியான புதிய அமைச்சு உருவாக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

ஜப்பானில் தனிமை பிரச்சினையை எதிர்கொள்ள தனியான புதிய அமைச்சு உருவாக்கம்

ஜப்பான் நாட்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை விகிதம் அதிகரித்தமையால் தனிமை பிரச்சினையை எதிர்கொள்ள தனியான அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தற்கொலை விகிதம் கடந்த ஆண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜப்பானில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் தற்கொலையால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதனால், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுடன் உலகம் தொடர்ந்து போரடி கொண்டிருப்பதால், தனிமை மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் குறிக்கோளுடன் ஜப்பான் தனிமைக்கான அமைச்சை உருவாக்கி அதற்கு அமைச்சரை நியமித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் தனிமைக்கான அமைச்சரை நியமித்த முதல் நாடாக விளங்கிய ஐக்கிய இராச்சியத்தை தொடர்ந்து, இந்த மாத ஆரம்பத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது அமைச்சரவையில் தனிமைக்கான அமைச்சின் அமைச்சராக டெட்சுஷி சகாமோட்டோவை நியமித்துள்ளார்.

இவர் ஜப்பானின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் பிராந்திய பொருளாதாரங்களை புத்துயிர் பெறுவதற்கும் பொறுப்பானவராார்.

ஜப்பான் தேசிய பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள முதல்நிலை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு 20,919 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது 2019 ஆம் ஆண்டை விட 750 ஆக அதிகரித்துள்ளது, 11 ஆண்டுகளில் முதல் ஆண்டு அதிகரிப்பை இது குறிக்கிறது. ஜப்பானில் பெண்களும் இளையவர்களும் அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad