தடைகளை நீக்க ஈரானுக்கு அமெரிக்கா புது நிபந்தனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

தடைகளை நீக்க ஈரானுக்கு அமெரிக்கா புது நிபந்தனை

2015 அணு சக்தி உடன்படிக்கையில் இணங்கிய விதிகளை கடைப்பிடிக்கும் வரை ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நீக்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ் தொலைக்காட்சி செய்திக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த போட்டியிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்கா முதலில் அனைத்துத் தடைகளையும் நீக்கனாலேயே அந்தக் கடப்பாட்டுக்கு திரும்புவதாக ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமனெய் கூறியுள்ளார்.

ஈரான் அணு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசு நாடுகளுடன் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. இதற்கு பகரமாகவே ஈரான் மீதான தடைகளை நீக்க இணக்கம் ஏற்பட்டது.

எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு விலகிக் கொண்டதோடு ஈரான் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்தார்.

எனினும் அமைதியான நோக்கத்திற்காகவே தமது அணுத் திட்டத்தை மேற்கொள்வதாக ஈரான் கூறி வருகிறது.

No comments:

Post a Comment