பாகிஸ்தானில் சிந்தி இனப் பெண்கள் வலிந்து காணமலாக்கச் செய்யப்படுதல் - கண்டன நடை பயணத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

பாகிஸ்தானில் சிந்தி இனப் பெண்கள் வலிந்து காணமலாக்கச் செய்யப்படுதல் - கண்டன நடை பயணத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு

பாகிஸ்தானில் சிந்தி இனப் பெண்கள் வலிந்து காணமலாக்கச் செய்யப்படுதலை கண்டித்து நியூயோர்க் முதல் வொசிங்டன் வரையிலான நீண்ட நடை பயணத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பிராட் ஷெர்மன் தனது முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் சிந்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நீண்ட நடை பயணமானது ஏப்ரல் 7ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடை பயணமானது நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் ஆரம்பித்து வொசிங்டனின் நிறைவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இந்த நீண்ட நடை பவனிக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிராட் ஷர்மன் “பாகிஸ்தானின் சிந்தி சமூகத்தின் தலைவர்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். சிந்தி சமூகத்தில் குறிப்பாக பெண்கள் கட்டாயமாக காணாமல் போதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். சிந்திகளை அவர்களின் சொந்த மொழியில் அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் வீ.ஓ.ஏ. செய்திச் சேவையில் சிந்தி மொழி சேவையை நிறுவுவதற்கான எனது முயற்சிகள் குறித்தும் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தி அறக்கட்டளையின் கீழ் மனித உரிமை மீறல்கள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

‘சுதந்திரம், இயற்கை மற்றும் அன்புக்கான நீண்ட நடை’ என்ற தலைப்பில், மேரிலாந்து, டெலாவேர், பென்சில்வேனியா, நியூஜெர்சி மற்றும் நியூயோர்ர்க் ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களை தொட்டுச் செல்லும் வகையில் இந்த பேரணி நடைபெறவுள்ளது.

நீண்ட நடை பற்றிய யோசனை பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணத்தின் யதார்த்தங்களிலிருந்து உருவாகியுள்ளது. சிந்து மக்களைப் பொறுத்த வரையில் சிந்தி சமூகத்தினர் வலுக்கட்டாயமாக காணாமல் போதல், சிந்தி பெண்களின் நிலை, சிந்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாது உள்ளிட்ட பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத விடயங்களாக உள்ளன. இதனை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதே இந்த நடைபவனியின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

இதேவேளை நடை பயணத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் ஆர்வலர் லாங்ரி “நான் இப்போது ஒரு நாளைக்கு 15 - 20 மைல் தூரம் நடை பயிற்சி செய்து வருகிறேன் என்று கூறுகின்றார்.

அதேநேரம், சிந்தி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் கலாநிதி. லாகரி “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட வேண்டும். அதுதான் ஒரே வழி. ஏமக்கு வேறு வழியில்லை. ஒன்று அல்லது இரண்டு ஆர்ப்பாட்டங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளாததால் நாம் ஒன்றுபட வேண்டும். துன்புறுத்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த அனைவரையும் இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு நான் அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad