திண்மக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி - நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

திண்மக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி - நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த

திண்மக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் முதலாவது மின் உற்பத்தி நிலையம் நாளை 17 ஆம் திகதி ஹெந்தல, கெரவலப்பிட்டியவில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது.

மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இம்மின்னுற்பத்தி நிலையத்தைத் திறந்து வைக்கின்றார்.

இம்மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக தினமும் 700 தொன் திண்மக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி நாளாந்தம் 10 மெகாவார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய வேலைத்திட்டத்தில் உள்நாட்டு மின் தேவையை நிறைவேற்றுவதற்கு புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

அந்தடிப்படையில் திண்மக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் முதலாவது நிலையம் நாளை திறக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

(மர்லின் மரிக்கார்)

No comments:

Post a Comment

Post Bottom Ad