உத்தரவாத விலையால் சதொச வருமானத்தில் பாரிய அதிகரிப்பு என்கிறார் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

உத்தரவாத விலையால் சதொச வருமானத்தில் பாரிய அதிகரிப்பு என்கிறார் அமைச்சர் பந்துல

அத்தியாவசிய பொருட்கள் 27 இற்கான நிர்ணய விலை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் சதொசவிற்கான வருமானம் 102 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்ட முந்தைய தினத்தில் 82 மில்லியனாக இருந்த தின வருமானம் நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில் 166 மில்லியன் ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், வர்த்தக அமைச்சினால் நாட்டின் தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

மூன்று மாத காலங்களுக்கு நிர்ணய விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதே அதன் நோக்கமாகும். அதன் மூலம் நுகர்வோரின் உரிமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தர்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment