உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டது மத்துகமை - பொன்துபிட்டிய கிராமம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டது மத்துகமை - பொன்துபிட்டிய கிராமம்

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்துபிட்டிய 727 கிராம அலுவல் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் கடந்த வெள்ளிக்கிழமை (05) முதல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad