ஆயிரம் ரூபா சம்பளம், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

ஆயிரம் ரூபா சம்பளம், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்றை இன்று (28) காலை முன்னெடுத்தது.

தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்டத் தொழிலாளர்கள் விளங்குவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொதுமக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment