(எம்.மனோசித்ரா)
இலங்கையில் அண்மையில் பொது மக்கள் மீது பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி சகல பொலிஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கமராக்களை பொறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அண்மையில் இலங்கையில் பொலிஸாரால் பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
எனவே நீதிமன்ற வளாகத்தில் சி.சி.டி.வி. கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதைப் போலவே, பொலிஸ் நிலையங்களிலும் பொறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு 'உடல் கமராவை' பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடையில் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போது திட்டமிடப்படாமல் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஆனால் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் கொவிட் பரவல் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். எனவே தொழிநுட்ப ரீதியில் முறையான தடுப்பூசி வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
No comments:
Post a Comment