நிலக்கண்ணி வெடி அகற்றும் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசுக்கும் இடையேயான வருடாந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (02) கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசின் சார்பில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபேகுணவர்தன மற்றும் மெக் நிறுவனம், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம்,டேஸ் நிறுவனம் மற்றும் சார்ப் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கையொப்பமிடப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேற்ப கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்ஜ அமைச்சர் இந்திக அனுருத்தவின் செயற்படுத்தலின் மூலம் நிலக்கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டம் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் நேரடி மேறபார்வையில் அண்மையில் கிளிநொச்சி, முகமாலையில் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்குள் நிலக்கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றும் என்று அரசு நம்புகிறது.
2002 ஆம் அண்டு தொடக்கம் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதோடு 2010 ஆம் ஆண்டு "தேசிய நிலக்கன்ணி அகற்றும் செயற்பாட்டு நிலையம்" ஆரம்பிக்கப்பட்டது.
இது நிலக்கண்ணி அகற்றும் நிறுவங்களை ஒருங்கிணைத்து, இயக்கி மற்றும் மேற்பார்வையும் செய்து வருகின்றது. இதில் இலங்கை இராணுவமும் நேரடியாக ஈடுபட்டுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய நிலக்கண்ணி அகற்றும் செயற்பாட்டு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் வீ. பிரேமசந்திரன், இராணுவ நிலக்கண்ணி அகற்றும் பிரிவின் மேஜர் சமிந்த இலங்கரத்ன உட்பட அரச அதிகாரிகள் மற்றும் நிலகண்ணி அகற்றும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்
No comments:
Post a Comment