கூரியர் சேவையில் வந்த 80 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

கூரியர் சேவையில் வந்த 80 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

அமெரிக்காவில் இருந்து கூரியர் சேவை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஐந்து பொதிகளிலிருந்து 80 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 1.150 கிலோ கிராம் கஞ்சாவை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

சுமார் 05 மாதங்களுக்கு முன்பு, ஐந்து கூரியர் பொதிகள் அமெரிக்காவிலிருந்து காட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக சீதுவவில் அமைந்துள்ள கொழும்பு சரக்கு கிடங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும் கூரியர் பொதிகளை பெற யாரும் வருகை தராததால் சந்தேகத்திற்கிடமான சுங்க போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள், பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது கூரியர் பொதிகளில் உள்ள முகவரிகள் போலியானவை என்பது அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டது.

அதனால் நேற்றைய தினம் குறித்த ஐந்து கூரியர் பொதிகளையும் திறந்து ஆய்வு செய்ய சுங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்போதே இந்த கஞ்சா தொகை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad