கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 60 பேர் பலி : நூற்றுக்கணக்கானோரை காணவில்லை - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 60 பேர் பலி : நூற்றுக்கணக்கானோரை காணவில்லை

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில் மை-டோம்பே மாகாணத்தில், சுமார் 700 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன ஏனைய பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பில் கொங்கோ அமைச்சர் ஸ்டீவ் எம்பி காயி தெரிவிக்கையில், கடந்த ஞாயிறு இரவு 700 பேர் கொண்ட குழு பயணித்த கப்பலானது லொங்கோலா எகோடி கிராமத்தில் கவிழ்ந்துள்ளது.

மீட்புக்குழுவினர் 60 உடல்களையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 300 பேரையும் மீட்டுள்ளனர். இன்னும் பலரை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கொங்கோ தலைநகர் கின்ஹாசாவிலிருந்து எக்வடோர் மாகாணத்தை நோக்கி குறித்த படகானது பயணித்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

படகு கவிழ்ந்தமைக்கான முக்கிய காரணம் அளவுக்கு அதிகமான உணவுப் பொருட்களையும் பயணிகளையும் அதில் ஏற்றியமையே என்றும் இரவு நேர பயணமும் மற்றுமொரு காரணம் என்றும் அமைச்சர் ஸ்டீவ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad