அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : ஐந்து குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : ஐந்து குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹோமாவின் துல்சாவில் இருந்து தென்கிழக்கே 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் அந்த வீட்டில் சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்து கிடந்தனர். ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அப்போது துப்பாக்கியுடன் வீட்டில் ஒருவர் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். பின்னர் போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் கைது செய்யப்பட்ட நபர் பெயரை வெளியிடப்படவில்லை. அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரத்தையும் வெளியிடவில்லை.

போலீஸ் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர்தான், துப்பாக்கிச் சூட்டிற்கான முழு விவரம் தெரியவரும்.

No comments:

Post a Comment