பலத்த பாதுகாப்புடன் சென்ற உலக சுகாதார நிபுணர் குழு - சீனாவின் வுகான் ஆய்வகத்தில் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

பலத்த பாதுகாப்புடன் சென்ற உலக சுகாதார நிபுணர் குழு - சீனாவின் வுகான் ஆய்வகத்தில் விசாரணை

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று (3) விசாரணை நடத்தினர்.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி கண்டறிய உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவை சீனாவுக்கு அனுப்பியது. அந்த குழுவினர் வுகான் நகருக்கு சென்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

அங்கு முதலில் வைரஸ் பரவிய இடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். சீன விஞ்ஞானிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். நேற்று வுகான் நகரில் உள்ள விலங்குகள் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இன்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் வுகானில் உள்ள ஆய்வகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் பலத்த பாதுகாப்புடன் கார்களில் ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment