க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள்

ஆரம்பமாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றையதினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை நிலையங்களில் 38 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். நாடு பூராகவும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் நலன் கருதி சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment