பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான 37 மில்லியன் ரூபா நிதி வழக்கு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான 37 மில்லியன் ரூபா நிதி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்படி வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது மேற்படி வழக்கு விசாரணை தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 37 மில்லியன் ரூபா நிதியை பி.ஐ.சி குழாய் கொள்வனவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment