சிங்கராஜ வனத்தில் மான் வேட்டை - 23 கிலோ இறைச்சியுடன் 04 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

சிங்கராஜ வனத்தில் மான் வேட்டை - 23 கிலோ இறைச்சியுடன் 04 பேர் கைது

சிங்கராஜ வனத்தில் மான்களை வேட்டையாடிய 4 சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டனர்.

சிங்கராஜ வனத்தில் வேட்டையாடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இறக்குவான பொலிசார் இணைந்து நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

இவர்கள் வேட்டைக்காக பயன்படுத் திய 1 ஜீப் வண்டி, 23 கிலோ மான் இறைச்சி, 11 துப்பாக்கி சன்னங்கள் சக்தி வாய்ந்த டோர்ச் லைட் 1 உட்பட வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய பல உபகரணங்கள் இவர்களிட விருந்து மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் நேற்றையதினம் பெல்மதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad