ஏறாவூரில் 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

ஏறாவூரில் 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கப்பட்டது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னைக்குடாப் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டாளர் சபைக்கு உத்தியோகபூர்வமாக காணி கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை 09.02.2021 இடம்பெற்றது.

இலங்கை முதலீட்டாளர் சபையின் வேண்டுகோளின் பேரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் இனங்காணப்பட்ட 200 ஏக்கர் காணிகளும் அளவை செய்யப்பட்டு ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக முதலீட்டார் சபைக்கு கையளிக்கப்பட்டது.

இதனூடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நான்கு ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள் இப்பிரதேசத்தில் அமைக்கப்படவிருப்பதுடன் இங்கு சுமார் 8 ஆயிரம் இளைஞர் யுவதிகள் நேரடியாக வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவிருப்பதோடு இதேபோன்ற எண்ணிக்கையிலானோர் இந்த ஆடைக் கைத்தொழில் பூங்காவோடு ஒட்டிய மறைமுகமான தொழில் வாய்ப்புக்களைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் அnதெரிவித்தனர்.

இக்காணி கையளிக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என். விமல்ராஜ், இலங்கை முதலீட்டாளர் சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ். சற்குணலிங்கம், காணி சீர்திருத்த ஆணைக்குழு கிளை நிருவாகப் பொறுப்பாளர் எஸ். சுரேந்தர் உட்பட கிளை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment