15 மாவட்டங்களில் உள்ள 69 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பு - வர்த்தமானியில் கையொப்பமிட்டார் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

15 மாவட்டங்களில் உள்ள 69 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பு - வர்த்தமானியில் கையொப்பமிட்டார் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

15 மாவட்டங்களில் உள்ள 69 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கும் வர்த்தமானியில் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கையொப்பமிட்டார். 30 சதவீதமாக வனப் பகுதியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 15 மாவட்டங்களுக்கு சொந்தமான 40761.11 ஹெக்டயார் நிலப்பரப்பை கொண்டுள்ள 69 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக புத்தளம் மாவட்டத்தில் 47..41 ஹெக்டயார் நிலப் பரப்பினையுடைய 5 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மொனராகலை, குருநாகலை, அநுதாரபுரம், காலி, புத்தளம், நுவரெலியா, கண்டி, மன்னார், பொலன்னறுவை, அம்பாறை, கேகாலை, கிளிநொச்சி, பதுளை, கம்பஹா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

கைச்சாத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரம் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் பாலித பிரனாந்துவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வனப் பகுதிகளை பாதுகாக்கும் நோக்கிலே 15 மாவட்டங்களில் உள்ள 69 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது. 

வனப் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன மீள் புத்தாக்கம் தொடர்பில் சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment