இலங்கை கிரிக்கெட் தேர்தலை மே 20ஆம் திகதி நடாத்த தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 4, 2021

இலங்கை கிரிக்கெட் தேர்தலை மே 20ஆம் திகதி நடாத்த தீர்மானம்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் (SLC) செயற்குழு தொடர்பான தேர்தலை எதிர்வரும் மே 20ஆம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் தேர்தல் குழுவினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மே 20ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு விளையாட்டு அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தலைவர், இரண்டு பிரதித் தலைவர்கள், செயலாளர் ஒருவர், உதவிச் ஒருவர், பொருளாளர் ஒருவர், உதவிச் பொருளாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குறித்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களுக்கு அதற்கான பட்டியல் எதிர்வரும் சனிக்கிழமை (06) அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இடம்பெற்ற தேர்தலில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாகாண, மாவட்ட மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் 142 பேர் வாக்களிப்பிற்கு தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா செயற்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad