கொலம்பியாவில் படகுகள் கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

கொலம்பியாவில் படகுகள் கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

கொலம்பியாவில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாக்கோ அருகே கடலில் 2 படகுகள் சென்று கொண்டிருந்தன. 

2 படகுகளிலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட மொத்தம் 50 பேர் இருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக 2 படகுகளும் கடலில் கவிழ்ந்தன. இதில் படகுகளில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் டுமாக்கோ நகர கடலோர காவல்படை வீரர்கள் உடனடியாக மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

ஆனால் அதற்குள் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 35 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 3 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. எனினும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.‌

படகு விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment