முகக் கவசம் அணியாத 10 பேருக்கு தலா 5000 ரூபா வீதம் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

முகக் கவசம் அணியாத 10 பேருக்கு தலா 5000 ரூபா வீதம் அபராதம்

முகக் கவசம் அணியாமல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் ஹர்ஷனா கெகுனாவெலா தலா 5000 ரூபா வீதம் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட பத்து பேரில் மூன்று பெண்கள் அடங்குவர்.

உனவடுனவின் இலுக்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முகக் கவசம் இல்லாமல் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நபர்களுக்கு எதிராக ஹபராதுவ பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். 

சந்தேகநபர்களை ஹபராதுவ பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் விமல் பிரேமவன்ச நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதனையடுத்து தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். 

இதேவேளை, முகக் கவசம் அணியாது நடமாடிய சுமார் 3 ஆயிரம் பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment