04 அமைச்சின் செயலாளர்கள், 02 தூதுவர்களை நியமிக்க அனுமதி வழங்கியது உயர் பதவிகள் பற்றிய குழு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

04 அமைச்சின் செயலாளர்கள், 02 தூதுவர்களை நியமிக்க அனுமதி வழங்கியது உயர் பதவிகள் பற்றிய குழு

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நைஜீரிய பெடரல் குடியரசு, சீஷேல் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் கூடிய இக்குழுவின் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி.சில்வா, உதய கம்மன்பில இராஜாங்க அமைச்சர்களான டொக்டர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ண, அநுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நைஜீரிய பெடரல் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக ஜே.எம்.ஜே.பி.பண்டாரவும், சீஷேல் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக சிறிமால் விக்கிரமசிங்க ஆகியோரையும் நியமிக்க இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், தொழில் அமைச்சின் செயலாளராக மாபா பத்திரன, கடற்றொழில் அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அனுராத விஜயக்கோனையும், சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவையும் நியமிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad