பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்று கொடுக்கும் விசேட குழு ஜீவன் தலைமையில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்று கொடுக்கும் விசேட குழு ஜீவன் தலைமையில் ஆராய்வு

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்று கொடுக்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்துக்கான நோக்கு’ எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்று கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த காணி உரிமை தொடர்பாக அமைச்சர் விசேட குழுவொன்றை நியமித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு, இதிலுள்ள தடைகளையும் இது தொடர்பான சிக்கல்களையும் நிவர்த்தி செய்வதற்கும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. 

முதற்கட்டமாக நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் முதலாவது கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு ஏனைய பகுதிகளில் விஸ்தரிப்பதற்கும் மக்களுக்கு விரைவாக காணி பாத்திரங்களை வழங்குவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

அத்தோடு பெருந்தோட்ட மக்களின் காணி உறுதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்து கொள்வது, சுய தொழில்களை முன்னெடுப்பது மற்றும் நுண்கடன் பெறுவதிலும் இவ்வாறான பல சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment